முகமது அப்பாஸ் சிறப்பான பந்துவீச்சு: 145 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலிய அணி!

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 137 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது...
முகமது அப்பாஸ் சிறப்பான பந்துவீச்சு: 145 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி பந்துவீச்சாளர் நாதன் லியான் அபாரமாகப் பந்துவீசி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸி. அணியில் உஸ்மான் கவஜா 3 ரன்களுக்கும், பீட்டல் சிடில் 4 ரன்களுக்கும் அப்பாஸ் பந்தில் வீழ்ந்தனர். ஆரோன் பின்ச் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு ஆஸி. 20 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் முகமது அப்பாஸின் அட்டகாசமான பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி, 50.4 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 12.4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது அப்பாஸ். பிலால் ஆசிஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 137 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com