பாகிஸ்தான் 282, 6 பந்துகளில் 4 விக்கெட் சாய்த்தார் ஆஸி. வீரர் லியான்

பாகிஸ்தான் 282, 6 பந்துகளில் 4 விக்கெட் சாய்த்தார் ஆஸி. வீரர் லியான்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி பந்துவீச்சாளர் நாதன் லியான் அபாரமாக பந்துவீசி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய பாகிஸ்தான்
அணியில் துவக்க வீரர் பாக்கர் ஸமான் 94, கேப்டன் சர்பராஸ் அகமது 94 ஆகியோர் மட்டுமே நிலைத்து ஆடி அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர். முகமது ஹபீஸ் 4, அஸார் அலி 15, ஹரிஸ் சோஹையில், ஆஸாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் லியான் பந்தில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் பிலால் ஆசிப் 12, யாசிர் ஷா 28, முகமது அப்பாஸ் 10 ஆகியோர் ஆட்டமிழந்தனர். மீர் ஹம்சா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 81 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாக். அணி 282 ரன்களை எடுத்தது.
லியான் அபார பந்துவீச்சு: உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் தனது நான்காவது ஓவரின் போது 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸார் அலி, ஹரிஸ் சோஹைல், ஆஸாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோரை லியான் வெளியேற்றினார். 12 ரன்களுக்கு 4 விக்கெட்டை அப்போது அவர் வீழ்த்தி இருந்தார். மொத்தம் 4-78 விக்கெட்டையும், மார்னஸ் லாபஸ்சேன் 3-45, ஸ்டார்க் 2-37, மார்ஷ் 1-21 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸி. அணியில் உஸ்மான் கவஜா 3 ரன்களுக்கும், பீட்டல் சிடில் 4 ரன்களுக்கும் அப்பாஸ் பந்தில் வீழ்ந்தனர். ஆரோன் பின்ச் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு பாக். 20 ரன்களை எடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com