ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எஃப்சி அணி 3-4 என தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்தின் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் சென்னையின் எஃப்சி அணி நார்தஈஸ்ட் யுனைடெட் அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐஎஸ்எல் கால்பந்தின் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் சென்னையின் எஃப்சி அணி நார்தஈஸ்ட் யுனைடெட் அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின. இதில், போட்டி தொடங்கிய 4-ஆவது நிமிடத்திலேயே நார்த்ஈஸ்ட் அணி வீரர் போர்ஜஸ் சேம் சைட் கோல் அடித்தார். இதனால், சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதைத்தொடர்ந்து, 15-ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் தி.சிங் ஒரு கோல் அடிக்க சென்னை அணி 2-0 என முன்னிலை வகித்தது. இதனால், நார்த்ஈஸ்ட் அணி நெருக்கடியுடன் ஆட்டத்தை தொடங்கியது. இதையடுத்து, நார்த்ஈஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

ஹாட்ரிக் கோல்:

இந்நிலையில், போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கேப்டன் பார்த்தலோமியோ அந்த அணிக்காக முதல் கோல் அடித்தார். அதன்பிறகு, அதே வீரியத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்த்தலோமியோ 37-ஆவது நிமிடம் மற்றும் 39-ஆவது நிமிடத்தில் கோல் போட்டு ஹாட்ரிக் கோல் அடித்தார். 

இதற்கிடையில், 32-ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் தி.சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 

இதனால், முதல் பாதி ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

இதையடுத்து, 2-ஆவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போட்டியின் 54-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்காக கோல் போட்ட நார்த்ஈஸ்ட் வீரர் போர்ஜஸ் அந்த அணிக்காக ஒரு கோல் அடிக்க நார்த்ஈஸ்ட் அணி 4-3 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு, போட்டி முடியும் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. 

இதன்மூலம், நார்த்ஈஸ்ட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com