ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாகிறார் பந்த்: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாகிறார் பந்த்: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) குவாஹத்தியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 

இதில், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார். அண்மையில், டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பந்த் இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டில் சதம், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை 90 ரன்களுக்கு மேல் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். 

தற்போது, பிசிசிஐ அறிவித்துள்ள 12 பேர் கொண்ட அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இதில், நிச்சயம் பந்துவீச்சாளர் யாரேனும் ஒருவரே நீக்கப்பட இருப்பதால் ரிஷப் பந்த் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார்.  

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்)
ஷிகர் தவான்
ரோஹித் சர்மா
அம்பதி ராயுடு
ரிஷப் பந்த்
எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
யுஸ்வேந்திர சாஹல்
உமேஷ் யாதவ்
முகமது ஷமி
சையத் கலீல் அகமது 

இதில், தோனி தான் விக்கெட் கீப்பிங் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், பந்த் பீல்டிங் தான் செய்யவுள்ளார். பேட்டிங் வரிசையில் முதல் 4 பேட்ஸ்மேன்களுக்கான இடத்துக்கு ரோஹித், தவான், கோலி, ராயுடு ஆகியோர் இருக்கின்றனர். அதனால் இவர் 5-ஆவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை 5-ஆவது வீரராக தோனி களமிறங்கினால், இவரை 6-ஆவது வீரராக களமிறக்கி ஃபினிஷிங்குக்கு தயார்படுத்தப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com