உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் தலைமையில் இந்தியா

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சனிக்கிழமை தொடங்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பஜ்ரங் புனியா தலைமையிலான 30 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் தலைமையில் இந்தியா


ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சனிக்கிழமை தொடங்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பஜ்ரங் புனியா தலைமையிலான 30 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
இதில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில், சந்தீப் தோமர் (57 கிலோ), சோன்பா (61 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), பங்கஜ் ராணா (70 கிலோ), ஜிதேந்தர் (74 கிலோ), சச்சின் ரதி (79 கிலோ), பவன் (86 கிலோ), தீபக் ராணா (92 கிலோ), மெளசம் கத்ரி (97 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர். ஆடவர் கிரேகோ ரோமன் பிரிவில், விஜய் (55 கிலோ), ஞானேந்தர் (60 கிலோ), கெளரவ் சர்மா (63 கிலோ), மணீஷ் (67 கிலோ), குல்தீப் மாலிக் (72 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), மன்ஜீத் (82 கிலோ), ஹர்பிரீத் (87 கிலோ), ஹர்தீப் (97 கிலோ), நவீன் (130 கிலோ) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில், ரிது போகத் (50 கிலோ), பிங்கி (53 கிலோ), சீமா (55 கிலோ), பூஜா தண்டா (57 கிலோ), சங்கீதா (59 கிலோ), சாக்ஷி மாலிக் (62 கிலோ), ரிது (65 கிலோ), நவ்ஜோத் கெளர் (68 கிலோ), ரஜ்னி (72 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் களம் காண்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com