ஊக்கமருந்து: ஹாக்கி வீரருக்கு 2 ஆண்டு தடை

இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது தேசிய ஊக்கமருந்து
ஊக்கமருந்து: ஹாக்கி வீரருக்கு 2 ஆண்டு தடை


இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஆகாஷிடம் பெறப்பட்ட மாதிரிகளில், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்டு பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நாடா, கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு ஆகாஷுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது வழங்கப்பட்டுள்ளது.
அறுவருக்கு 4 ஆண்டு தடை: இதேபோல், மல்யுத்த வீரர் அமித் குமார், கபடி வீரர் பிரதீப் குமார், பளுதூக்குதல் வீரர் நாராயண் சிங், தடகள வீரர்கள் செளரவ் சிங், பல்ஜீத் கெளர், சிம்ரன்ஜித் கெளர் ஆகியோரும் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் அவர்களது மாதிரிகளில் கண்டறியப்பட்டன. 
இதையடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது நாடா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com