டென்மார்க் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
டென்மார்க் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்


டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.
உலகின் 6-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 14-ஆம் நிலை வீரரான சீனாவின் லின் டானை 18-21, 21-17, 21-16 என்ற செட்களில் வென்றார். 2 முறை ஒலிம்பிக் சாம்பியன், 5 முறை உலக சாம்பியனான லின் டானை ஸ்ரீகாந்த் வீழ்த்துவது இது 2-ஆவது முறையாகும்.
இருவரும் இத்துடன் 5 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். கடைசியாக 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியின் காலிறுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்ரீகாந்த் இப்போட்டியின் காலிறுதியில் மற்றொரு இந்தியரான சமீர் வர்மா சந்திக்கிறார். உலகின் 23-ஆம் நிலை வீரரான சமீர் வர்மா, தனது முந்தைய சுற்றில் இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினார்.
சாய்னா நெவால்: மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியை 21-15, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, இதுவரை 6 முறை யமாகுசியை சந்தித்துள்ள நிலையில், தற்போது 2-ஆவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார். 
சாய்னா தனது காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். இதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 18-21, 22-20, 21-18 என்ற செட்களில் தென் கொரியாவின் லீ ஹோ சி/ஷின் சியுங் சான் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com