ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஓமன் அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இமாலய வெற்றி கண்டது. இந்நிலையில், இந்திய அணி தனது 2-ஆவது போட்டியில் நேற்று (சனிக்கிழமை) பாகிஸ்தானை எதிர்கொண்டது. 

போட்டியின் முதல் நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய அந்நாட்டு வீரர் முகமது இர்ஃபான் போட்டியின் முதல் கோலை அடித்தார். இதனால், இந்திய அணி சற்று நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பிறகு, போட்டியின் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்திய அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்து வந்தது. 

இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் 24-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்தார். இதனால், முதல்பாதி ஆட்டநேர முடிவில் இருஅணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில், 33-ஆவது நிமிடத்தின் போது மன்தீப் சிங் இந்திய அணிக்காக 2-ஆவது கோலை அடித்து முன்னிலை பெறச் செய்தார். அதே முனைப்புடன், போட்டியின் 42-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதனால், 3-ஆவது கால்பகுதி ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகித்தது. 

இதைத்தொடர்ந்து, கடைசி கால்பகுதி ஆட்டத்தில் இருஅணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இருஅணிகளின் தடுப்பாட்டம் நன்றாக இருந்ததால் போட்டியில் மேற்கொண்டு கோல் எண்ணிக்கை உயரவில்லை. இதன்மூலம், போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான அணி தனது அடுத்த போட்டியில் நாளை (திங்கள்கிழமை) ஓமனை எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com