இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளார் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளார் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

1999-ல் கேலேவில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமான ஹெராத், அதே விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டுடன் விடை பெற முடிவெடுத்துள்ளார். 

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், கேலேவில் நவம்பர் 6 அன்று தொடங்குகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 27 அன்று முடிவடையவுள்ளது.

40 வயதான ஹெராத், 92 டெஸ்டுகளிலும் 71 ஒருநாள் ஆட்டங்களிலும் 17 டி20 ஆட்டங்களிலும் இடம்பெற்றுள்ளார். 430 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 35 வயதுக்குப் பிறகு 230 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். 31-வது வயதில் 2009-ல், இலங்கை அணியில் நீண்ட காலத்துக்குப் பிறகு அழைக்கப்பட்டார் ஹெராத். கேலேவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்து அணியில் மீண்டும் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். இதனால் கேலேவில் நடைபெறுகிற டெஸ்டுடன் தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com