விஜய் ஹசாரே போட்டியில் அசத்திய இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படுமா?

அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் தமிழக வீரர் முகுந்தும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் ஷபாஸ் நதீமும் முதலிடம் பிடித்துள்ளார்கள்...
விஜய் ஹசாரே போட்டியில் அசத்திய இந்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படுமா?

விஜய் ஹஸாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய தில்லி அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹிம்மத் சிங் 41, துருவ் ஷோரே 31, பவன் நேகி 21, சுபோத் பதி 25 ஆகியோர் ஒரளவு ரன்களை சேர்த்தனர். பின்னர் ஆடிய மும்பை அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 180 ரன்களை எடுத்து வென்றது. அந்த அணி வீரர்கள் ஆதித்ய தரே 71, சித்தேஷ் லேட் 48, சிவம் துபே 19 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தில்லி தரப்பில் நவ்தீப் சைனி 3-53 விக்கெட்டை வீழ்த்தினார். மும்பை அணி இறுதியாக கடந்த 2006-07-இல் தான் விஜய் ஹஸாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் தமிழக வீரர் முகுந்தும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் ஷபாஸ் நதீமும் முதலிடம் பிடித்துள்ளார்கள். 22 விக்கெட் வீழ்த்தி இடண்டாமிடம் பிடித்துள்ளார் தமிழக இளம் வீரர் வருண் சக்கரவத்தி. இந்நிலையில் இவர்களில் எத்தனை பேருக்கு இந்திய அணியிலோ அல்லது இந்திய ஏ அணியிலோ இடம் கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடம் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் புதிய வீரர்களுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது கடினம்.

அடுத்ததாக தியோதர் போட்டி நடைபெறவுள்ளது (இதற்கான எந்தவொரு அணியிலும் கம்பீருக்கு இடம் கிடைக்கவில்லை). இதையடுத்து விஜய் ஹசாரே மற்றும் தியோதர் போட்டி என இரண்டிலும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு இந்திய அணியில் வருங்காலத்தில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 முகுந்த் (தமிழ்நாடு)

 9 560 1 4 9
 2. கம்பீர் (தில்லி)  10 518 2 1 5
 3. பிஸ்ட் (மேகாலயா)  8 502 2 2 6
 4. கெளசல்   (உத்தரகண்ட்) 8 489 3 0 15
 5. யாஷ்பால் சிங்   (மணிப்பூர்) 7 488 3 1 10

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 
 1.

 நதீம்   (ஜார்க்கண்ட்) 

 9 24 8/10 3.86
 2. வருண்   சக்கரவர்த்தி   (தமிழ்நாடு) 9 22 5/38 4.23
 3. ராகுல் சஹார்   (ராஜஸ்தான்) 9 20 5/29 4.28
 4. குல்கர்ணி   (மும்பை) 9 18 4/39 4.35
 5. வருண் ஆரோன்   (ஜார்க்கண்ட்) 8 18 4/55 5.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com