இலங்கை முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் ஓய்வு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹெராத், திங்கள்கிழமை ஓய்வு முடிவை அறிவித்தார்.
இலங்கை முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹெராத் ஓய்வு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹெராத், திங்கள்கிழமை ஓய்வு முடிவை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரும், முதன்மை இடதுகை சுழற்பந்துவீச்சாளருமாக திகழ்பவர் ரங்க ஹெராத். 1999-ஆம் ஆண்டு அறிமுகமான ஹெராத், தற்போது ஐசிசி தரவரிசையில் 7-ஆம் இடத்தில் உள்ளார். 

40 வயதான ஹெராத், தற்போது வரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 34 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் மற்றும் 9 முறை 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பந்துவீச்சு சராசரி 27.95 ஆகும்.

காலே மைதானத்தில் அறிமுகமான ஹெராத், அங்கு இன்னும் 1 விக்கெட் வீழ்த்தினால் அந்த மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்வார். 

இந்நிலையில், காலே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ரங்கன ஹெராத் அறிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் 19 வருடங்களாக விளையாடி அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 522 விக்கெட்டுகளை ஹெராத் வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com