10,000 ரன்களை எட்ட கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவை

ஒரு நாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்கள் சாதனை இலக்கை அடைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவைப்படுகிறது.
10,000 ரன்களை எட்ட கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவை


ஒரு நாள் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்கள் சாதனை இலக்கை அடைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவைப்படுகிறது.
கேப்டன் கோலி பல்வேறு பேட்டிங் சாதனைகளை தனது விருப்பம் போல் தகர்த்து வருகிறார். மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 140 ரன்களுடன் 36-ஆவது சதமடித்தார். சிறந்த பார்மில் உள்ள கோலி, கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளை முறியடிப்பார் எனக் கருதப்படுகிறது.
10,000 ரன்கள்: ஒரு நாள் ஆட்டத்தில் 10 ஆயிரம் ரன்கள் என்ற சாதனை இலக்கை அடைய அவருக்கு 81 ரன்களே இன்னும் தேவைப்படுகிறது. அவர் இச்சாதனையை நிகழ்த்தினால், துரிதமாக 10000 ரன்களை எட்டிய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைப்பார்.
259 இன்னிங்ஸில் 10,000 ரன்கள் எட்டியவர் என்ற சாதனை தற்போது சச்சின் வசம் உள்ளது. தற்போதைய மேற்கிந்திய தீவுகள் தொடரில் கோலி 10,000 ரன்களை அடைந்தால், வெறும் 204 இன்னிங்ஸில் இச்சாதனையை நிகழ்த்தி பெருமையை பெறுவார்.
மேலும் 10,000 ரன்களை எட்டிய நான்காவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் கோலி பெறுவார். நிகழாண்டு 2018-இல் அவர் 889 ரன்களை விளாசியுள்ளார். வெறும் 10 ஆட்டங்களில் கோலி இந்த ரன்களை எடுத்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 22 ஆட்டங்களில் 1025 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். கோலி 4-ஆவது இடத்தில் உள்ளார்.
ரோஹித்துக்கு வாய்ப்பு: மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் சாதனையை சமன் செய்ய இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. முதல் ஆட்டத்தில் ரோஹித் 152 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும். அவரது 8 சிக்ஸர்கள் தற்போது . அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சிறப்பை தந்துள்ளது.
ஒரு நாள் ஆட்டங்களில் அவர் 194 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 195 சிக்ஸர்களுடன் அவருக்கு முன்பு உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com