இங்கிலாந்தை 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய இலங்கை 366/6 ரன்களை எடுத்தது.
இங்கிலாந்தை 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை


இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய இலங்கை 366/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த்லெவிஸ் முறையின்படி 219 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்களை குவித்தது. துவக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 95, சதிரா சமரவிக்ரமா 54, கேப்டன் சண்டிமால் 80, குசால் மென்டிஸ் 56 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 2-71, மொயின் அலி 2-57 விக்கெட்டை வீழ்த்தினர். 
இங்கிலாந்து சரிவு: ஜேசன் ராய் 4, அலெக்ஸ் ஹேல்ஸ் 4, ஜோ ரூட் 10, ஜோஸ் பட்லர் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 37 ரன்களுடன் மொயின் அலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சாம் கர்ரன் 2 ரன்களுக்கு வெளியேறினார்.
பென்ஸ்டோக்ஸ் 67 ரன்களிலும், அடில் ரஷீத் 4 ரன்களிலும், பிளங்கட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கûளை இங்கிலாந்து எடுத்திருந்த போது மழை பெய்தது. அகிலா தனஞ்செயா 4, சமீரா 3, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com