ஆசியக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை: இருமுறை நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!

டிசம்பர் 19 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. அதேபோல சூப்பர் ஃபோர் சுற்றில்...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை: இருமுறை நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்!

துபை, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டி, செப்டம்பர் 15-ல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று நிறைவுபெறுகிறது.

இப்போட்டியை நடத்தும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கிடைந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஆசிய கவுன்சில் போட்டியில் வெல்லும் அணி 6-ஆவது அணியாக இவற்றோடு இணையும். ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஓமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் இந்த ஓர் இடத்துக்காகப் போட்டியிடுகின்றன. 

இந்தியா, பாகிஸ்தான், தகுதி பெறும் அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் லீக் ஆட்டங்களில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் (நான்கு )அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றில் விளையாடவுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் தலா மூன்று ஆட்டங்கள் கிடைக்கும். அதன்பிறகு சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்குத் தகுதி பெறும்.

டிசம்பர் 19 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. அதேபோல சூப்பர் ஃபோர் சுற்றில் செப்டம்பர் 23 அன்று குரூப் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் மோதுகின்றன. அன்றைய தினமும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியப் போட்டி 2018 - அட்டவணை

15 செப்டம்பர் - வங்கதேசம் vs இலங்கை (துபை)
16 செப்டம்பர் - பாகிஸ்தான் vs தகுதி பெறும் அணி (துபை)
17 செப்டம்பர் - இலங்கை vs ஆப்கானிஸ்தான் (அபி தாபி)
18 செப்டம்பர் - இந்தியா vs தகுதி பெறும் அணி  (துபை)
19 செப்டம்பர் - இந்தியா vs பாகிஸ்தான் (துபை)
20 செப்டம்பர் - வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் (அபி தாபி)

சூப்பர் ஃபோர் சுற்று

21 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (துபை)
21 செப்டம்பர் - குரூப் பி முதல் இடம் vs குரூப் ஏ 2-ம் இடம் (அபி தாபி)
23 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் ஏ 2-ம் இடம் (துபை)
23 செப்டம்பர் - குரூப் பி முதல் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (அபி தாபி)
25 செப்டம்பர் - குரூப் ஏ முதல் இடம் vs குரூப் பி முதல் இடம் (துபை)
26 செப்டம்பர் - குரூப் ஏ 2-ம் இடம் vs குரூப் பி 2-ம் இடம் (அபி தாபி)

செப்டம்பர் 28 - இறுதிச்சுற்று (துபை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com