அதிக டெஸ்டுகளில் விளையாடாமல் போனதில் வருத்தமில்லையா?: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பத்ரிநாத் பதில்!

இந்தியாவில் டேல் ஸ்டெய்ன், மார்னே மார்கல், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பே உங்களுக்கு...
அதிக டெஸ்டுகளில் விளையாடாமல் போனதில் வருத்தமில்லையா?: ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பத்ரிநாத் பதில்!

தன்னுடைய 38-வது பிறந்த தினத்துக்கு அடுத்த நாளன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக வீரர் பத்ரிநாத்.

2000-ம் வருடம் முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் பத்ரிநாத், இந்தியாவுக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை எடுத்த 47-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். ரஞ்சிப் போட்டியில் 7850 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பத்ரிநாத் கூறியதாவது:

38 வருடங்களில் 30 வருடங்கள் கிரிக்கெட்டுக்காகச் செலவழித்துள்ளேன். இனிமேல் என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உள்ளேன். 

இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததில் வருத்தம் இல்லை. இந்தியாவில் டேல் ஸ்டெய்ன், மார்னே மார்கல், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பே உங்களுக்குக் கிடைக்காது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து, சிறப்பாக விளையாடினால் மட்டுமே உங்களுக்கு எது சாதகமானது என்று தெரியவரும். எனவே இந்திய அணிக்காக அதிக டெஸ்டுகளில் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்கே அணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். நான் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன் என யாரும் நினைத்ததில்லை. இந்தியாவுக்காக ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியது நான் கனவிலும் நினைக்காத ஒன்று என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com