சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எவ்வளவு தூரம் நெருங்கினார் குக்?

இந்தப் புள்ளிவிவரங்கள்தான் சச்சினை குக் மிஞ்சுவார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கின...
சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எவ்வளவு தூரம் நெருங்கினார் குக்?

குறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் - இங்கிலாந்து வீரர்கள்

2000 டெஸ்ட் ரன்கள் - குக்
3000 டெஸ்ட் ரன்கள் - குக்
4000 டெஸ்ட் ரன்கள் - குக்
5000 டெஸ்ட் ரன்கள் - குக்
6000 டெஸ்ட் ரன்கள் - குக்

குறைந்த வயதில் டெஸ்ட் ரன்கள் (அனைத்து நாடுகளையும் சேர்த்து)

6000 டெஸ்ட் ரன்கள் - குக்
7000 டெஸ்ட் ரன்கள் - குக்
8000 டெஸ்ட் ரன்கள் - குக்
9000 டெஸ்ட் ரன்கள் - குக்
10000 டெஸ்ட் ரன்கள் - குக்
11000 டெஸ்ட் ரன்கள் - குக்
12000 டெஸ்ட் ரன்கள் - குக்

இந்தப் புள்ளிவிவரங்கள்தான் சச்சினை குக் மிஞ்சுவார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கின. கடைசியில் அந்த எதிர்பார்ப்பு ஈடேறவில்லை என்பது சச்சினின் சாதனைகள் மீது மேலும் பிரமிப்பை உருவாக்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். 

2013-ல் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஓர் ஆருடத்தை வெளியிட்டார். சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்களை அலாஸ்டர் குக்கால் தாண்ட முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது சச்சின் ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கூறியது. அப்போது சச்சின் 15837 டெஸ்ட் ரன்களும் குக் 8000 டெஸ்ட் ரன்களும் எடுத்திருந்தார்கள். குக் எடுத்துள்ள ரன்களையும் அவர் வயதையும் வைத்துப் பார்க்கும்போது குக்கால் இதைச் சாதிக்கமுடியும் என்று நம்பினார் பீட்டர்சன்.

ஆனால் சச்சினின் அருகில் கூட செல்லமுடியாமல் தற்போது ஓய்வுபெறவுள்ளார் குக். இருவரும் எந்தளவுக்கு ரன்கள் எடுத்துள்ளார் என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் vs அலாஸ்டர் குக்

 பெயர்         விளையாடிய   வருடங்கள் மொத்த சதங்கள் டெஸ்டுகள் டெஸ்ட் சதங்கள்  ரன்கள் 
 சச்சின்  24 100 200 51 15921 
 குக் 12 37 160 32 12254

அதிக ரன்கள்: டெஸ்ட்

1. சச்சின் - 15,921 ரன்கள் 

2. ரிக்கி பாண்டிங் - 13,378 ரன்கள்
3. காலிஸ் - 13,289 ரன்கள்
4. டிராவிட் - 13,288 ரன்கள்
5. சங்கக்காரா - 12,400 ரன்கள்
6. அலாஸ்டர் குக் - 12,254 ரன்கள்

அதிக டெஸ்டுகள்

1. சச்சின் - 200 டெஸ்டுகள்
2. பாண்டிங் - 168 டெஸ்டுகள்
3. ஸ்டீவ் வாஹ் - 168 டெஸ்டுகள்
4. காலிஸ் - 166 டெஸ்டுகள்
5. சந்தர்பால் - 164 டெஸ்டுகள்
6. டிராவிட் - 164 டெஸ்டுகள்
7. குக் - 160 டெஸ்டுகள்

அதிக டெஸ்ட் சதங்கள்

1. சச்சின் - 51 சதங்கள்
2. காலிஸ் - 45 சதங்கள்
3. பாண்டிங் - 41 சதங்கள்
11. குக் - 32 சதங்கள்

கடைசி டெஸ்ட் விளையாடியபோது இருந்த வயது

1. கூச் - 41 வயது 6 மாதங்கள்
2. சந்தர்பால் - 40 வயது 8 மாதங்கள்
3. சச்சின் - 40 வயது 6 மாதங்கள்
19. குக் - 33 வயது 8 மாதங்கள்
20. க்ரீம் ஸ்மித் - 33 வயது 1 மாதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com