கடைசி டெஸ்டில் குக் நிதானம்: முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 68/1

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணியின் வீரர்களில் மாற்றம் இல்லை. அதேசமயம் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் விஹாரி சேர்க்கப்பட்டனர். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு குக் மற்றும் ஜென்னிங்ஸ் நிதானமான தொடக்கத்தை தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஜென்னிங்ஸ் 23 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-ஆவது வீரராக குக்குடன் மொயீன் அலி இணைந்தார். 

முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அலாஸ்டர் குக் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com