யுஎஸ் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்: 3-ஆவது முறையாக பட்டம் வென்றார்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
யுஎஸ் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்: 3-ஆவது முறையாக பட்டம் வென்றார்


யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோவை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்டு இறுதி கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யுஎஸ் ஓபன் போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற்று வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை ஒஸாகா சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-டெல் பொட்ரோ ஆகியோர் மோதினர். 
8-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடும் ஜோகோவிச் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-3 என எளிதாக வென்ற நிலையில் இரண்டாவது செட்டில் டெல் பொட்ரோ கடும் சவாலாக விளங்கினார். இதனால் போராடி தான் 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச்சால் வெல்ல முடிந்தது. மூன்றாவது செட்டில் தொடக்கம் முதலே ஜோகோவிச் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதால் டெல் பொட்ரோவால் சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து 6-3 என தோல்வியுற்றார்.
இதன் மூலம் ஜோகோவிச் மூன்றாவது முறையாக யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். கடந்த ஜூலை மாதம் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது 14-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றி மூலம் ஜோகோவிச் மீண்டும் உலகின் மூன்றாம் நிலை வீரர் அந்தஸ்தை பெறுகிறார்.
பீட் சாம்ப்ராஸ் சாதனை சமன் செய்தார் ஜோகோவிச்: ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் ரோஜர் பெடரர் அதிக முறையாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், நடால் 17 முறையும் வென்றுள்ளனர். முன்னாள் நட்சத்திர வீரர் பீட் சாம்ப்ராஸ் 14 முறை பட்டங்களை வென்றிருந்தார். தற்போது அவரது சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழங்கை காயம் காரணமாக நீண்ட காலம் ஆடமுடியாமல் இருந்த ஜோகோவிச் அதில் இருந்து மீண்டு ஓரே ஆண்டில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
பெடரர், நடாலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்: நான் இவ்வாறு சிறப்பாக ஆடுவதற்கு பெடரர், நடாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பீட் சாம்ப்ராஸ் எனது குழந்தைப் பருவத்தில் எனது முன்மாதிரியாக திகழ்ந்தவர். அவரது சாதனையை சமன் செய்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து நானும் டென்னிஸில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது ஆட்டத்திறன் சிறப்பாக அமைந்ததற்கு நடால், பெடரர் தான் காரணம்.
பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடிப்பார்: பொட்ரோ
ரோஜர் பெடரரின் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை ஜோகோவிச் விரைவில் முறியடிப்பார் என டெல் பொட்ரோ கூறியுள்ளார். தற்போது 14-ஆவது பட்டத்தை வென்றுள்ள அவர், பெடரரை விட 6 ஆண்டுகள் இளையவர். 
மேலும் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார். பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோர் காலத்தில் நானும் ஆடுகிறேன் என்பதே மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியாவிட்டாலும், அவர்களுடன் நெருக்கமாக ஆடுவது திருப்தி தருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com