கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? தோனி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணத்தை மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி, கடந்த 2014-இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் முழு நேர கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஞ்சியில் ஒருநிகழ்வில் பங்கேற்ற தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதற்கான விளக்கத்தை அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

"2019 உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்க புதிய கேப்டனுக்கு போதிய அவகாசம் வழங்குவதற்காக எனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தேன். புதிய கேப்டனுக்கு உரிய காலம் வழங்காமல் வலுவான அணியை உருவாக்குவது சாத்தியமற்றது. அதனால், சரியான நேரத்தில் தான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதாக நான் நம்புகிறேன். 

இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி பயிற்சிப் போட்டிகளை தவறவிட்டது. அதனால் தான், சூழ்நிலைக்கேற்ப தங்களை பொருத்திக் கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறினர். இது விளையாட்டின் ஒரு பகுதி. ஐசிசி தரவரிசையில் இந்திய அணி தற்போது முதலிடம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com