ஓய்வு பெற்றார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட்

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான பால் காலிங்வுட்.
ஓய்வு பெற்றார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட்


முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான பால் காலிங்வுட்.
42 வயதான காலிங்வுட் கடந்த 1996-இல் அறிமுகமாகி இதுவரை 17000 ரன்களை குவித்துள்ளார். இதில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் ஆட்டங்களில் குவித்த 4259 ரன்களும் அடங்கும்.
இங்கிலாந்து சார்பில் 197 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் கேப்டனாக இருந்த போது 2010 டி 20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை அந்நாடு வென்றது.
கடந்த 2007-இல் விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றார். டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து 2010-11-இல் ஓய்வு பெற்றார். கடந்த 2015-இல் குறைந்தபட்ச ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆலோசகராக காலிங்வுட் நியமிக்கப்பட்டார். 
நீண்ட ஆலோசனைக்கு பின் நடப்பு சீசன் போட்டிகளுக்கு பின் ஓய்வு பெறும் முடிவை எடுத்தேன். இது கடினமான முடிவு தான். எளிதாக எடுக்கப்பட்டதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com