செரீனா பிரச்னையால் வருத்தம் இல்லை: யுஎஸ் ஓபன் சாம்பியன் ஒஸாகா

செரீனா பிரச்னையால் வருத்தம் ஏதுமில்லை என யுஎஸ் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒஸாகா கூறியுள்ளார்.
செரீனா பிரச்னையால் வருத்தம் இல்லை: யுஎஸ் ஓபன் சாம்பியன் ஒஸாகா


செரீனா பிரச்னையால் வருத்தம் ஏதுமில்லை என யுஎஸ் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒஸாகா கூறியுள்ளார்.
நியூயார்க்கில் அண்மையில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றில் மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை ஒஸாகா நேர் செட்களில் முன்னாள் சாம்பியன் செரீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். அப்போது செரீனா விதிகளை மீறி செயல்பட்டார் எனக் கூறி நடுவர் கார்லோஸ் ஒஸாவுக்கு புள்ளிகளை வழங்கினார். இதனால் செரீனாவுக்கும் நடுவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இப்பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியது. 
பரிசளிப்பு விழாவின் போது, ஒஸாகா கண்ணீர் மல்க கோப்பையை பெற்றார். செரீனா அப்போது அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக ஒஸாகா வியாழக்கிழமை கூறியதாவது:
செரீனா சம்பவத்தால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. ஏனென்றால் எனக்கு வேறு எந்த கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியிலும் இதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை.
நான் இதில் வேதனைப்பட ஏதுமில்லை. மொத்தத்தில் நான் நிறைய சாதித்ததாக உணர்வு ஏற்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 5 வீராங்கனைகளில் ஒருவராக வர வேண்டும். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும். மேலும் அடுத்த வாரம் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் போட்டியிலும் வெல்ல வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு போட்டியாளரின் கனவாகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com