பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்: மீராபாய், சதீஷ், வெங்கட் போட்டியில்லை

பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சீனியர்கள் சதீஷ் சிவலிங்கம், வெங்கட் ராகுல் ரகலா, நடப்பு சாம்பியன் மீராபாய் சானு
பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப்: மீராபாய், சதீஷ், வெங்கட் போட்டியில்லை


பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சீனியர்கள் சதீஷ் சிவலிங்கம், வெங்கட் ராகுல் ரகலா, நடப்பு சாம்பியன் மீராபாய் சானு ஆகியோர் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துர்க்மேனிஸ்தானில் நவம்பர் 1 முதல் நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 10 தகுதிப்போட்டிகளில் ஒன்றாகும். 
இதையடுத்து, இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் வீரர்கள் அடங்கிய பி' அணியை இந்தியா களமிறக்க உள்ளது.
மூத்த வீரர்கள் பங்கேற்காதது குறித்து தேசிய பளுதூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா கூறியதாவது:
சீனியர் வீரர், வீராங்கனைகளுக்கான திட்டத்தின்படி, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு அவர்கள் ஓய்வெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் உடலுக்கு உரிய ஓய்வு அளிக்காத காரணத்தால் தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட இயலாமல் போனது.
தற்போது ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் முன்பாக அவர்களுக்கு உரிய ஓய்வு அவசியமாகும். சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் வீரர்கள் களம் காண்பார்கள். ஒலிம்பிக் போட்டிக்கான 10 தகுதிச்சுற்றுகளில் ஏதேனும் 6-இல் பங்கேற்றால் போதுமானது என்று விஜய் சர்மா கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை. ஆடவருக்கான 77 கிலோ பிரிவில் அஜய் சிங், சதீஷ் சிவலிங்கம் முறையே 5 மற்றும் 10-ஆவது இடங்களைப் பிடித்தனர். இதில் சதீஷ் ஒரு முயற்சியின்போது காயமடைந்தார். 94 கிலோ பிரிவில் விகாஸ் தாக்குர் 8-ஆம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் பங்கேற்ற ஒரே போட்டியாளரான ராகி ஹால்தர் (63 கிலோ), எடையை தூக்க இயலாமல் தோல்வி கண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com