மல்யுத்தம்: உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் சஜன் பன்வால்

ஸ்லோவேகியாவில் நடைபெறும் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சஜன் பன்வால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெள்ளிப்


ஸ்லோவேகியாவில் நடைபெறும் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சஜன் பன்வால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
தர்னவா நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக்கான 77 கிலோ கிரேக்கோ ரோமன் பிரிவில் பங்கேற்றுள்ள சஜன், தனது காலிறுதியில் நார்வேயின் பெர் ஆண்டர்ஸ் குரேவை வீழ்த்தினார்.
பின்னர் அரையிறுதியில் உக்ரைனின் டிமிட்ரோ கர்துபேவை தோற்கடித்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்துக்கான இறுதிச்சுற்றில் அவர் ரஷியாவின் இஸ்லாம் ஒபியேவை எதிர்கொள்கிறார்.
இதனிடையே, இப்போட்டியில் விஜய் (55 கிலோ), சாகர் (63 கிலோ) ஆகிய மேலும் இரு இந்தியர்கள் பங்கேற்றிருந்தனர். அரையிறுதி வரை முன்னேறிய அவர்கள், இறுதிச் சுற்றுக்கு முன்னேற இயலாமல் தோற்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் களம் காண்கின்றனர்.
இப்போட்டியின் கடந்த சீசனில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் சஜன். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com