விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன...
விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நிகழாண்டுக்கான விருதுகளைப் பெறவுள்ள வீரர்கள், பயிற்சியாளர்களின் பெயர்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெறும், மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை 23 வயது மீராபாய் சானு, 48 கிலோ பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தையும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். முன்னாள் வீராங்கனை குஞ்சுராணியிடம் பயிற்சி பெறும் மீராபாய் சானு, கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2017 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் தகுதி பெற்றாலும் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையே கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

2 வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, 20 வீரர்களுக்கு அர்ஜூனா, 8 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது

விராட் கோலி (கிரிக்கெட்)
மீராபாய் சானு (பளு தூக்குதல்)

துரோணாச்சார்யா விருது

1. சுபேதார் குட்டப்பா (குத்துச்சண்டை)
2. விஜய் சர்மா (பளு தூக்குதல்)
3. ஸ்ரீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்)
4. சுக்தேவ் சிங் பன்னு (தடகளம்)
5. கிளாரன்ஸ் லோபோ (ஹாக்கி, வாழ்நாள் பங்களிப்பு)
6. டரக் சின்ஹா (கிரிக்கெட், வாழ்நாள் பங்களிப்பு)
7. ஜிவான் குமார் சர்மா (ஜூடோ, வாழ்நாள் பங்களிப்பு)
8. வி.ஆர். பீடு (தடகளம், வாழ்நாள் பங்களிப்பு)

அர்ஜூனா விருது

1. நீரஜ் சோப்ரா (தடகளம்)
2. ஜின்ஸன் ஜான்ஸன் (தடகளம்)
3. ஹிமா தாஸ் (தடகளம்)
4. சிக்கி ரெட்டி (பாட்மிண்டன்)
5. சதீஷ் குமார் (குத்துச்சண்டை)
6. ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்)
7. சுபாங்கர் சர்மா (கோல்ஃப்)
8. மன்ப்ரீத் சிங் (ஹாக்கி)
9. சவிதா (ஹாக்கி)
10. ரவி ராத்தோர் (போலோ)
11. ரஹி சர்னோபத் (துப்பாக்கிச் சுடுதல்)
12. அன்குர் மிட்டல் (துப்பாக்கிச் சுடுதல்)
13. ஸ்ரேயாசி சிங் (துப்பாக்கிச் சுடுதல்)
14. மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்)
15. சத்யன் (டேபிள் டென்னிஸ்)
16. ரோஹன் போபன்னா (டென்னிஸ்)
17. சுமித் (மல்யுத்தம்)
18. பூஜா கடியன் (வுஷு)
19. அன்குர் தாமா (பாரா - தடகளம்)
20. மனோஜ் சர்கார் (பாரா - பாட்மிண்டன்)

தயான் சந்த் விருது

1. சத்யதேவ் பிரசாத் (வில்வித்தை)
2. பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி)
3. பாபி அலோசியஸ் (தடகளம்)
4. செளகலே டடு தத்தாத்ரே (மல்யுத்தம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com