ஆசியக் கோப்பை: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
ஆசியக் கோப்பை: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

 ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் 'சூப்பர் - 4' சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஜடேஜா இடம் பெற்றார்.
இதனையடுத்து வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. வங்கதேச அணியில் 49.1 ஓவர்கள் முடிவில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
அணியில் லிட்டன் தாஸ் 7, ஷான்டோ 7, ஷாகிப் அல் ஹசன் 17, முஷ்பிகுர் ரகிம் 21, முகமது மிதுன் 9, மகமதுல்லா 25 ரன், மொசாடெக் உசேன் 12 ரன் , மோர்ட்டசா 26, மெகதி ஹசன் 42 ரன்களை எடுத்தனர்.
இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
இதனையடுத்து 174 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
இந்திய அணி 36.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 83, தவன் 40, அம்பட்டிராயுடு 13, தோனி 33, தினேஷ் கார்த்தி 1 என எடுத்தனர்.
இந்திய அணி கேப்டன் ரோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com