கேல்ரத்னா விருது விவகாரம்: மத்திய அமைச்சர் ரத்தோருடன் மல்யுத்த வீரர் புனியா சந்திப்பு

ராஜிவ் கேல்ரத்னா விருது விவகாரம் தொடர்பாக மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சர் ரத்தோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
கேல்ரத்னா விருது விவகாரம்: மத்திய அமைச்சர் ரத்தோருடன் மல்யுத்த வீரர் புனியா சந்திப்பு

ராஜிவ் கேல்ரத்னா விருது விவகாரம் தொடர்பாக மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சர் ரத்தோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கேல்ரத்னா, அர்ஜுன விருதுகளின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. வீரர்களுக்கு தரப்படும் உயர்ந்த விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது நிகழாண்டு கிரிக்கெட் வீரர் கோலி, பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இது மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியாவுக்கு மிகுந்த அதிர்ச்சி, ஏமாற்றத்தை அளித்தது. தனக்கும் கேல்ரத்னா விருது வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அமைச்சரை சந்திப்பேன். நல்ல முடிவு ஏற்படா விட்டால், வழக்கு தொடருவேன் என புனியா எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் ரத்தோரை சந்தித்து தனது கோரிக்கையை முன் வைத்தார். 
இதுதொடர்பாக புனியா கூறுகையில், விருதுக்கு எனது பெயரை தேர்வு செய்யாதததின் காரணத்தை அமைச்சரிடம் கேட்டறிந்தேன். நான் போதிய புள்ளிகள் பெறவில்லை என அவர் தெரிவித்தார். 
கோலி, மீராபாய் சானு ஆகிய இருவரையும் விட நான் கூடுதல் புள்ளிகள் பெற்றுள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார் புனியா. அவருடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் உடன் சென்றார்.
காமன்வெல்த், ஆசியப் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கம், உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கஙகளை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் விருதுகள் பட்டியலில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com