பாகிஸ்தான் அணி மீது மட்டுமே ஏன் கவனம் செலுத்துகின்றனர்? : திராவிட் வேதனை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏன் பாகிஸ்தான் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் எனத் தெரியவில்லை என முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் வேதனை தெரிவித்தார்
பாகிஸ்தான் அணி மீது மட்டுமே ஏன் கவனம் செலுத்துகின்றனர்? : திராவிட் வேதனை


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏன் பாகிஸ்தான் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் எனத் தெரியவில்லை என முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் வேதனை தெரிவித்தார்.
இங்கிலாந்தில் தொடரை வென்ற கடைசி இந்திய அணியின் கேப்டனான அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தற்போதைய அணி இங்கிலாந்தில் நிலவிய அசாதாரணமான கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது. நாம் எப்போதும் நேர்மையாக செயல்படுவோம். 
இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங்குககு ஏற்ற சூழல் இல்லை. இரு அணிகளின் பேட்ஸ்மேன்களுமே போராடினர். நானும் அங்கு விளையாடியுள்ளேன். ஆனால் 5 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ந்து கடினமான சூழல் நிலவியதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே அடுத்த முறை நாம் இங்கிலாந்து சுற்றுப் பயணம் செல்லும் போது, அங்குள்ள சூழல்களுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அதை எதிர்கொள்வோம்.
ரவிசாஸ்திரி அணி குறித்து கூறியவற்றை பெரிதாக்கி விட்டனர். நாம் நடந்து முடிந்த தொடரில் இருந்து பாடம் கற்க வேண்டும். நாம் சிறந்த அணியா இல்லையா என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த முறை பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
இந்திய அணியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை தவறவிட்டனர். தொடரை இழந்தாலும்,சில சாதகங்கள் உள்ளன. 
சிறந்த பெளலிங், பீல்டிங், கேட்ச் பிடித்தல் போன்றவை மேம்பட்டன. ஆசிய கோப்பையில் நாம் அனைத்து அணிகள் மீதும் கவனம் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் மீது மட்டுமே கவனம் வைக்கின்றனர். வங்கதேசம், ஆப்கன் அணிகளும் சிறப்பாக ஆடுகின்றன. வெள்ளை நிற பந்தில் நாம் நன்றாக விளையாடுகிறோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com