2022 ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி

2020 ஒலிம்பிக் போட்டியில் தீவிர கவனம் செலுத்தினாலும், வரும் 2022-இல் நடைபெறவுள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்க வாய்ப்புள்ளவர்களுக்கு தடையின்றி நிதியுதவி வழங்கப்படும் என
2022 ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு தொடர்ந்து நிதியுதவி

2020 ஒலிம்பிக் போட்டியில் தீவிர கவனம் செலுத்தினாலும், வரும் 2022-இல் நடைபெறவுள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்க வாய்ப்புள்ளவர்களுக்கு தடையின்றி நிதியுதவி வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
 அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அடுத்த இரு ஆண்டுகளில் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவர். எனினும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள் அடுத்த ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடும். இதை நான் அறிந்துள்ளேன். இடையில் நிதியுதவி நிறுத்தப்பட்டு விடும்.
 இது பெரிய சவாலாக உள்ளது. பெரிய வணிக நிறுவனங்களுடன் நான் பேசி உள்ளேன். பதக்க வாய்ப்புள்ளவர்களுக்கு தடையின்றி நிதியுதவி கிடைக்கச் செய்யப்படும். அனைத்தும் மாறும். பல்வேறு மாறுதல்களை விளையாட்டில் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com