சென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கை

சென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவரும், முன்னாள் டேவிஸ் கோப்பை அணி கேப்டனுமான விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கை

சென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவரும், முன்னாள் டேவிஸ் கோப்பை அணி கேப்டனுமான விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
 டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்றில் அண்மையில் செர்பியாவிடம் 0-4 என இந்தியா தோல்வியுற்றது. இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 தரமான ஒற்றையர் வீரர்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒற்றையர் பிரிவில் தான் கவனம் செலுத்த வேண்டும். 4 சிறந்த ஒற்றையர் வீரர்கள் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றனர்.
 இரட்டையர் வீரர்கள் இருந்தும் போதிய பலனில்லை. இதனால் முதன்மையான அணிகள் பிரிவில் நம்மால் இடம் பெற முடியாமல் போகிறது.
 இதனால் அடுத்த ஆண்டு டேவிஸ் கோப்பை போட்டி 18 அணிகள் இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், நாம் 24 அணிகள் தகுதிச் சுற்றில் ஆடிச் செல்ல வேண்டும். ராம்குமார் ராமநாதன், யுகி பாம்ப்ரி ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், உடல்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
 யுகி சீசன் முழுமையாக ஆட முடியவில்லை. ராம்குமாரும் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். புதிய டேவிஸ் கோப்பை விதிமுறைகள் இந்தியாவுக்கு உடனே பாதிப்பை ஏற்படுத்தாது. புதிய விதிமுறைகளால் இப்போட்டி எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் உள்ளது. இதில் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
 புணேவுக்கு ஏடிபி போட்டிகள் இடம் மாறியது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சென்னையில் மீண்டும் ஏடிபி போட்டியை நடத்த நடடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தியாவில் மகளிர் டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ நடத்தப்படவில்லை. அது போன்ற ஒன்றை நடத்தலாம்.
 சென்னையைத் தவிர, கோவை, திருச்சியிலும் சிறிய அளவிலான ஏடிபி போட்டிகளை நடத்த முனைவோம். டிஎன்டிஏ சார்பில் நடத்தப்படும் அகாதெமியில் தற்போது 18 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். சிறப்பு பயிற்சி மையத்தை தொடங்கினால் சிறந்த வீரர்கள் உருவாக வாய்ப்பு கிட்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com