தவன்-ரோஹித் அதிரடியால் வீழ்ந்தது பாகிஸ்தான்

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.
தவன்-ரோஹித் அதிரடியால் வீழ்ந்தது பாகிஸ்தான்

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.
 முதலில் ஆடிய பாகிஸ்தான் 7 விக்கெட்டை இழந்து 237 ரன்களையே எடுத்தது. அந்த அணியில் ஷோயிப் மாலிக் 78, சர்ஃப்ராஸ் 44 ரன்களை எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி
 ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இமாம் உல் ஹக், பாக்கர் ஸமான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
 8-ஆவது ஓவரின் போது சுழற்பந்து வீச்சாளர் சஹால் பந்து வீச்சில் 10 ரன்களுடன் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார் இமாம்.
 பின்னர் பாக்கர், பாபர் ஆஸம் ஆகியோர் சேர்ந்து ஆடிய நிலையில் 55 ரன்கள் எடுத்த நிலையில் பாக்கர் 31 ரன்களுடன் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். 9 ரன்களுடன் களத்தில் இருந்த பாபர் ஆஸம் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஷோயிப் மாலிக், கேப்டன் சர்ஃப்ராஸ் இணை சேர்ந்து நிதானமாக ஆடி ரன் எண்ணிக்கை உயர்த்தினர். 66 பந்துகளில் 44 ரன்களை எடுத்த சர்ஃப்ராஸ், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷோயிப் மாலிக், 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 90 பந்துகளில் 78 ரன்களை எடுத்திருந்த நிலையில், பும்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்திலேயே ஆசிப் அலி 30 ரன்களுக்கு சஹால் பந்தில் போல்டானார்.
 இதையடுத்து 6 விக்கெட் இழப்புக்கு பாக். அணி 212 ரன்களையே எடுத்திருந்தது.
 ஷதாப் கானும் 10 ரன்களுடன் பும்ரா பந்தில் போல்டானார். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து பாக். அணி 237 ரன்களை எடுத்திருந்தது. இந்திய தரப்பில் பும்ரா 2-29, சஹால் 2-46, குல்தீப் 2-41 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 ரோஹித்-தவன் விஸ்வரூபம்: 210 ரன்கள் குவிப்பு
 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் களமிறங்கினர்.
 இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 210 ரன்களை குவித்தனர். 2 சிக்ஸர், 16 பவுண்டரியுடன் 100 பந்துகளில் 114 ரன்களை எடுத்த தவன், ரன் அவுட்டாகி வெளியேறினார்.
 ஆசிய கோப்பையில் தவன் அடிக்கும் 2-ஆவது சதமாகும். ஒரு நாள் ஆட்டத்தில் 15-ஆவது சதமாகும். கேப்டன் ரோஹித் சர்மா 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 119 பந்துகளில் 111 ரன்களுடனும், அம்பதி ராயுடு 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 இறுதியில் இந்திய அணி 39. ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 238 ரன்களுடன் வெற்றி பெற்றது.
 இது ரோஹித்தின் 19-ஆவது சதமாகும்.
 தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக 2-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com