வங்கதேசம் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.
வங்கதேசம் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வென்றது.
 இரு அணிகள் இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் நடைபெற்றது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மோதின.
 டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. லிட்டன்தாஸ், நஸ்முல் உசேன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு தடுமாற்றமாக இருந்தது. நஸ்முல் உசேன் 6 ரன்களுக்கும், முகமது மிதுன் 1 ரன்னுக்கும் வெளியேறினர்.
 பின்னர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். லிட்டன் தாஸ் 41, ஷகிப் 0, முஷ்பிகுர் 33, மமுத்துல்லா 74 , கேப்டன் மொர்டஸா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
 இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து வங்கதேசம் 249 ரன்களை எடுத்தது. இம்ருல் கெய்ஸ் 72, மெஹிதி ஹாஸன் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கன் தரப்பில் அப்தாப் ஆலம் 3-54, ரஷித் கான் 1-46, முஜிப்புர் ரஹ்மன் 1-35 விக்கெட்டை வீழ்த்தினர்.
 ஆப்கானிஸ்தான்:
 250 ரன்கள் வெற்றி இலக்கோடு ஆப்கன் அணி தரப்பில் மொகமது ஷஸாத், ஈஷானுல்லா ஜனத் களமிறங்கினர். எனினும் ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜனத் 8, ரஹ்மத் 1, ஹஸ்மதுல்லா 71, அஷ்கர் ஆப்கன் 39, மொகமது ஷஸாத் 53, நபி 38, ரஷித் கான் 5 ரன்களோடு வெளியேறினர்.
 இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 246 ரன்களை மட்டுமே எடுத்து ஆப்கன் தோல்வியுற்றது. ஷென்வாரி 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 கடைசி வரை போராடியும் ஆப்கன் அணியால் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com