லா லீகா கால்பந்து: பார்சிலோனா-ஜிரோனா ஆட்டம் டிரா

லா லீகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பார்சிலோனா எஃப்சி மற்றும் ஜிரோனா
கோலடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ.
கோலடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ.


லா லீகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பார்சிலோனா எஃப்சி மற்றும் ஜிரோனா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
கேம்ப் நெள மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெளல் புரிந்ததால் பார்சிலானோ டிபண்டர் கிளெமண்ட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டியிருந்தது.
பார்சிலோனா சார்பில் கேப்டன் மெஸ்ஸி முதல் கோலடித்தார். ஜிரோனா சார்பில் கிறிஸ்தியன் டுவானி 2 கோல்கள் அடித்தார். எனினும் ஜெரார்ட் பிக் கடைசி நேரத்தில் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் செவில்லா அணி 6-2 என்ற கோல் கணக்கில் லெவன்ட் அணியை வென்றது. ரியல் பெட்டிஸ்-பில்பவோ, வலேன்சியா-வில்லா ரியல் அணிகளின் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
சீரி ஏ சாம்பியன் போட்டி:
இத்தாலி சீரி ஏ லீக் போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ் அணிக்கும் பிராஸினோன் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்க கோலை அடித்தார். பின்னர் பெட்ரிகோ கோலடிக்கும் வாய்ப்பையும் ரொனால்டோ உருவாக்கித் தந்தார். இதன் மூலம் முந்தைய போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற சம்பவத்தில் இருந்து மீண்டும் தனது ஆட்டத்திறனை நிரூபித்தார். ஜுவென்டஸ் அணியும், நேபோலி அணியும் வரும் சனிக்கிழமை டூரின் நகரில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com