லேவர் கோப்பை: டீம் ஐரோப்பா சாம்பியன்

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் டீம் ஐரோப்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
லேவர் கோப்பையை வென்ற டீம் ஐரோப்பா அணியினர்.
லேவர் கோப்பையை வென்ற டீம் ஐரோப்பா அணியினர்.

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் டீம் ஐரோப்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸி. டென்னிஸ் ஜாம்பவானும், 11 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ராட் லேவர் பெயரில் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இதில் உலகின் தலைசிறந்த வீரர்கள் டீம் ஐரோப்பா, டீம் வேர்ல்ட் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
டீம் ஐரோப்பா அணியில் பிரபல வீரர்கள் பெடரர், ஜோகோவிச், வெரேவ் உள்ளிட்டோரும், டீம் வேர்ல்ட் அணியில் ஜான் ஐஸ்நர், ஜேக் சாக், கெவின் ஆண்டர்சன், நிக் கிர்ஜியோஸ், ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சிகாகோவில் நடைபெற்ற இப்போட்டியில் டீம் ஐரோப்பா அணி வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
கடைசி ஆட்டத்தில் அலெக்சாண்டர் வெரேவ் 6-7, 7-5, 10-7 என்ற செட் கணக்கில் கெவினை வீழ்த்தினார். அதே நேரத்தில் 13-8 என்ற கேம் கணக்கில் டீம் வேர்ல்ட் அணி தோல்வியைத் தழுவியது.இரட்டையர் பிரிவில் ஐஸ்நர்-சாக் இணை 4-6, 7-6, 11-9 என நேர் செட்களில் பெடரர்-வெரேவ் இணையை வீழ்த்தியது.
மற்றொரு ஒற்றையர் பிரிவில் பெடரர் 2-1 என நேர் செட்களில் ஐஸ்நரை வென்றார்.
கடந்த முறை பிரேகில் நடைபெற்ற முதல் போட்டியில் ஐரோப்பா வென்றது. வரும் 2019 செப்டம்பரில் ஜெனிவாவில் லேவர் கோப்பை போட்டி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com