ஷோயிப் மாலிக்கை அத்தான் என அழைத்த இந்திய ரசிகர்கள்

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக்கை அத்தான் என இந்திய ரசிகர்கள் அழைத்தால் கலகலப்பு ஏற்பட்டது.
ஷோயிப் மாலிக்கை அத்தான் என அழைத்த இந்திய ரசிகர்கள்


பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக்கை அத்தான் என இந்திய ரசிகர்கள் அழைத்தால் கலகலப்பு ஏற்பட்டது.
துபையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக பாக்.-இந்தியா அணிகளுக்கு இடையே சூப்பர் ஃபோர் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது ஷோயிப் மாலிக் 78 ரன்களை குவித்தார். பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்த போது, அவர் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்தார்.
மைதானத்தில் அமர்ந்திருந்த இந்திய ரசிகர்கள், ஷோயிப்பை நோக்கி ஜிஜ்ஜு இங்கே பாருங்கள் என அழைத்தனர். இதை எதிர்பாராத ஷோயிப் இந்திய ரசிகர்களுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
ஜிஜ்ஜு என்றால் ஹிந்தியில் அத்தான், அல்லது மாமா என பொருள்படும்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவை திருமணம் செய்துள்ளார் பாக்.கின் ஷோயிப் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com