இந்திய இளைஞர் கால்பந்து அணி எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளை பெறும்

இந்திய இளைஞர் கால்பந்து அணிகள் எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெறும் என சீனியர் அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய இளைஞர் கால்பந்து அணி எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளை பெறும்


இந்திய இளைஞர் கால்பந்து அணிகள் எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளைப் பெறும் என சீனியர் அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்ட மற்றும் 20-வயதுக்குட்பட்ட இந்திய அணிகள் அண்மையில் வெளிநாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை ஈட்டியுள்ளன. 16 வயது அணி வலிமை வாய்ந்த இராக் அணியையும், 20 வயது அணி, கால்பந்து ஜாம்பவான் அணி ஆர்ஜென்டீனாவையும் வெற்றி கண்டுள்ளன.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்திறனைக் கொண்டுள்ளனர். பயிற்சியாளர் பிபியானோ பெர்ணான்டஸும் சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார். சிறுவர், இளைஞர் அணி எதிர்காலத்தில் சிறப்பான வெற்றிகளை பெறும். 
இந்திய கால்பந்து லீக் (ஐஎஸ்எல்) அறிமுகம் செய்யப்பட்டதின் மூலம் கால்பந்து அடுத்த கட்டத்துக்கு பயணித்துள்ளது. ஒட்டுமொத்த சூழல், விளையாட்டு கட்டமைப்பு போன்றவை மாறியுள்ளன. இந்திய கால்பந்து என்பது ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்து வருகிறது. 
வரும் 2019 ஆசிய கோப்பை போட்டியை இந்திய அணி எதிர்நோக்கியுள்ளது. இதற்காக பல்வேறு ஆட்டங்களில் விளையாடி வருகிறோம் என்றார்.
பெங்களூரு எஃப்சி அணியில் இடம் பெற்றுள்ள சேத்ரி ஐஎஸ்எல் சீசன் 5-க்கு தயாராகி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com