சமனில் முடிந்தது ஆப்கன்-இந்திய ஆட்டம்: இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஆ ப்கானிஸ்தான்-இந்திய அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
சமனில் முடிந்தது ஆப்கன்-இந்திய ஆட்டம்: இந்தியாவுக்கு ஏமாற்றம்


ஆ ப்கானிஸ்தான்-இந்திய அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. 
டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக முகமது ஷஸாத், ஜாவேத் அஹமதி ஆகியோர் களமிறங்கினர். தீபக் சஹார், சித்தார்த் கவுல் அதிக ரன்களை அள்ளிக் கொடுத்தனர்.
விக்கெட்டுகள் சரிவு: எனினும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜாவேத்தும், 3 ரன்களோடு ரஹ்மத் ஷாவும், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 14.4 ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எடுத்திருந்தது ஆப்கன் அணி.
அவர்களுக்கு பின் வந்த ஹஸ்மத்துலா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஆப்கன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினர். அப்போது 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 82 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது ஆப்கன் அணி.
குல்புதின் நைப் 15 ரன்களில் சஹார் பந்துவீச்சில் வெளியேறினார்.
மொகமது ஷஸாத் அபார சதம்: தொடக்க வீரர் ஷஸாத் அபாரமாக ஆடி 7 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 124 ரன்களை எடுத்து கேதர் ஜாதவ் பந்துவீச்சில் கார்த்திக்கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். தனி ஒருவராக நின்று ஷஸாத் ஆப்கன் அணியின் ஸ்கோரை உயர்த்திய அவர் கேதர் ஜாதவ் பந்தில் வீழ்ந்தார்.
4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் முகமது நபி 64 ரன்களிலும், நைபுல்லா ஜத்ரன் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆப்கன் அணி 252 ரன்களை எடுத்தது. ரஷித் கான் 12, அப்தாப் ஆலம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அபாரமாக பந்துவீசி 3-46 விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் 2-38, கலில், சஹார், ஜாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா: பின்னர் ஆடிய இந்திய அணி தரப்பில் லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடிய நிûயில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தனர். தலா 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்த ராயுடுவும், 60 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்து வெளியறினர். அவர்களைத் தொடர்ந்து தோனி, மணிஷ் பாண்டே 8 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் எடுத்து வெளியேறினர். அவருக்கு பின் வந்த கேதர் ஜாதவ் 19 , தீபக் சஹார் 12 , குல்தீப் யாதவ் 9 ரன்களிலும், சித்தார்த் கெüல் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். இந்தியாவும் 252 ரன்கள் எடுத்திருந்த பரபரப்பான சூழ்நிலையில் 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஜடேஜா அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் நஜிபுல்லா. ஜடேஜா 25 ரன்கள் எடுத்திருந்தார். 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் இந்தியா ஆல் அவுட்டானது. ஆப்கன் தரப்பில் அப்தாப் ஆலம், நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேப்டன் ஆனார் தோனி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் தோனி. கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவன் ஆகியோருக்கு ஆப்கனுடன் நடந்த ஆட்டத்தில் ஓய்வு தரப்பட்டது. இதன் மூலம் 200-ஆவது ஒரு நாள் ஆட்டத்துக்கு தலைமை தாங்கிய சிறப்பைப் பெற்றார் தோனி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com