ஆசியக் கோப்பை: அதிக ரன்கள்,  அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

ஆட்ட நாயகன் விருது லிடன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் வென்றார்...
ஆசியக் கோப்பை: அதிக ரன்கள்,  அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

வங்கதேச அணியை கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிறைவாக இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. தொடக்க வீரர் லிடன் தாஸ் 121 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 50-ஆவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டியது. கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா அதிகப்பட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.  

ஆட்ட நாயகன் விருது லிடன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் வென்றார்.

அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 ஷிகர் தவன் (இந்தியா)

 5 342 2 0 6
 2. ரோஹித் சர்மா   (இந்தியா)  5 317 1 2 13
 3. முஷ்ஃபிகுர் ரஹிம்   (வங்கதேசம்)  5 302 1 1 5
 4. மொஹமது   ஷசாத்   (ஆப்கானிஸ்தான்) 5 268 1 1 8
 5. ஹஸ்மதுல்லா   ஷாகிதி   (ஆப்கானிஸ்தான்) 5 263 0 3 0

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 
 1.

 ரஷித்  கான்   (ஆப்கானிஸ்தான்) 

 5 10 3/46 3.72
 2. முஸ்தாஃபிசுர்   (வங்கதேசம்) 5 10 4/43 4.40
 3. குல்தீப் யாதவ்   (இந்தியா) 6 10 3/45 4.08
 4. பூம்ரா (இந்தியா) 4 8 3/37 3.67
 5. ஜடேஜா (இந்தியா) 4 7 4/29 4.45

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com