இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து... 
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது. 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தொடர் நாயகன் உஸ்மான் கவாஜா முதல் இடத்திலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கம்மின்ஸ் முதலிடத்திலும் உள்ளார்கள்.

அதிக ரன்கள்

எண்   பெயர்ஆட்டங்கள் ரன்கள் சதங்கள்  அரை   சதங்கள்  சிக்ஸர் 
 1.

 உஸ்மான்   கவாஜா (ஆஸ்திரேலியா) 

 5 383  2 2 4
 2. விராட் கோலி (இந்தியா)  5 310 2 0 2
 3. ஹேண்ட்ஸ்காம்ப்   (ஆஸ்திரேலியா)  5 236 1 1 3
 4. ரோஹித் சர்மா   (இந்தியா) 5 202 0 2 3
 5. ஷிகர் தவன் (இந்தியா) 5 177 1 0 3

அதிக விக்கெட்டுகள்

எண்   பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 
 1.

 கம்மின்ஸ்   (ஆஸ்திரேலியா) 

 5 14 5/70 4.64
 2. ஸாம்பா   (ஆஸ்திரேலியா) 5 11 3/46 5.68
 3. குல்தீப் யாதவ்   (இந்தியா) 5 10 3/54 6.04
 4. ஜை ரிச்சர்ட்சன்   (ஆஸ்திரேலியா) 3 8 3/37 6.03
 5. பும்ரா (இந்தியா) 5 7 3/63 4.99

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com