போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க ஸ்வைப் கருவி: சென்னை போக்குவரத்து காவல் துறையில் விரைவில் அறிமுகம்

சில்லறை பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க,
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க ஸ்வைப் கருவி: சென்னை போக்குவரத்து காவல் துறையில் விரைவில் அறிமுகம்

சில்லறை பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க, "ஸ்வைப்' கருவியை சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்த விவரம்:
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன.
இவற்றில், தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மட்டும் 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் 8 -ஆம் தேதி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது.
முன்னதாக, சில்லறை இல்லாததால் ஏற்படும் பிரச்னையை கருத்தில் கொண்டு, பொதுமக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து விதிமீறல் வழக்குகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டாம் என காவல் துறை உயர் அதிகாரிகள், போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தினர். இதன் விளைவாக தினமும் பதிவாகும் வழக்கு எண்ணிக்கை 86 சதவீதம் குறைந்தது.
அதேசமயம், போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அதிகமாக நடைபெறத் தொடங்கின. இதனால் போக்குவரத்து விதிமுறை வழக்குகள் பதிவதற்கு மாற்று வழிமுறை ஏதேனும் இருக்கிறதா என காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.
ஸ்வைப் கருவி: இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகளில் அபராதம் வசூலிப்பதற்காக, டெபிட் கார்டுகளில் இருந்து பணத்தை நேரடியாக வசூப்பதற்கு "ஸ்வைப்' கருவியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கி நிர்வாகிகளிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்படி, ஜனவரி மாதம் சோதனை முறையில் "ஸ்வைப்' கருவிகளை அபராதம் வசூலிக்க பயன்படுத்த காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு கிடைக்கும் வரவற்பை பொருத்து, இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளதாக சென்னை காவல் துறைû வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையின் மூலம் சில்லறை பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், போக்குவரத்து விதிமுறை மீறல்களையும் கட்டுப்படுத்த முடியும் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com