முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி காலமானார்

முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி காலமானார்

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி (87) வெள்ளிக்கிழமை (டிச. 2) இரவு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி (87) வெள்ளிக்கிழமை (டிச. 2) இரவு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இவர் 1962 ஆம் ஆண்டில் ஆடுதுறை தொகுதியிலும், 1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனிடையே, எம்.எல்.சி. உறுப்பினராகவும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்தார்.
மேலும், 3 முறை அமைச்சராக இருந்தார். இவர் வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் அமைச்சர் பதவியில் இருந்தவர்.
திராவிடர் கழகத்தில் செயலாற்றி வந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். திமுகவில் மாவட்டச் செயலர், மண்டலச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த இவர் கடைசியாக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்த நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் காலமானார். அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவிகள் சாவித்திரி அம்மாள், கிருஷ்ணவேணி அம்மாள் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். ஒரு மகன், 2 மகள்களுள் இறந்துவிட்டனர்.
இவரது இறுதி சடங்கு சொந்த ஊரான நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மேக்கிரிமங்கலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com