கோ.சி. மணியின் உடல் சொந்த ஊரில் தகனம்

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர்.
முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் உடல் ஆடுதுறையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் ஊர்வலமாக அவரின் சொந்த ஊரான நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மேக்கிரிமங்கலத்திற்கு சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரின் பூர்வீக இல்லத்தில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. கோ.சி. மணியின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எஸ்.ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுதர்சனம், க.பொன்முடி, சுப.தங்கவேலன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், கே.ஆர். பெரியகருப்பன், மதிவாணன், எஸ்.என்.எம்.உபயதுல்லா, ஏ.எம்.ஹெச்.நாஜிம், மாவட்ட திமுக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.இராமலிங்கம், குத்தாலம் பி.கல்யாணம், குத்தாலம் க.அன்பழகன், எம். எம்.சித்திக், எம்.பன்னீர்செல்வம், ஜெக.வீரபான்டியன், எம்.ஜி.கே.நிஜாமுதீன், அருள்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் அவரது உடல் இறுதிச் சடங்குக்காக ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரின் பெற்றோர் சமாதிகளுக்கு அருகே தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரது மகன் கோ.சி.இளங்கோவன் தீ மூட்டினார்.

திமுக நிகழ்ச்சிகள் 3 நாள்களுக்கு ரத்து

முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மறைவையொட்டி, திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கோ.சி.மணி வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் மறைவினையொட்டி சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு திமுகவின் அமைப்புகள் அனைத்தும் கட்சி கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் 3 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com