அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நிறைவு

சென்னை க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நிறைவு பெற்றது.
அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நிறைவு


சென்னை: சென்னை க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நிறைவு பெற்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலேயே, இன்று காலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் தமிழக நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பழனிச்சாமி, ஜெயக்குமார், ராஜேந்திரன் பாலாஜி உள்ளிட்டோரும், சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், வைத்திலிங்கம், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com