அமைதி காத்த மக்களுக்கு நன்றி: ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி வெளியான தருணத்தில் மிகவும்அமைதி காத்து சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உதவிய மக்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மிகக் கடுமையானதொரு சூழலில் தமிழக மக்கள் அனைவரும் அமைதியும், பொறுமையும் காத்தனர். இதன் மூலம் சட்டத்தை மதிக்கும் கலாசாரம்-ஒழுங்கினைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம் என்பதை நாட்டுக்கே உணர்த்தியுள்ளோம். தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என ஒட்டுமொத்த அரசு நிர்வாக இயந்திரத்துக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறையினரின் பணி என்பது ஈடு இணையில்லாதது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
தனித்தனி கடிதங்கள்: அரசு ஊழியர்களைப் பாராட்டும் வகையில், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கும், காவல் துறையினரின் பணிகளை மெச்சும் வகையில் அதன் இயக்குநருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனித்தனியே கடிதங்களை எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com