பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால் புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன், தூத்துக்குடி நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புதன்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

பாம்பன், தூத்துக்குடி நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புதன்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் சுமார் 1,180 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்தது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, பாம்பன், தூத்துக்குடி நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புதன்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கடலில் ராட்சத அலைகள் தோன்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலோரப் பகுதி மக்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. இருப்பினும் 2 மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மழையில்லை.
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com