கருணாநிதியைப் பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும்: திமுக வேண்டுகோள்

கோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க வருவதைத் தவிர்க்குமாறு அந்தக் கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்க வருவதைத் தவிர்க்குமாறு அந்தக் கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி புதன்கிழமை இல்லம் திரும்பினார். எனினும், மேலும் சில நாள்களுக்கு அவர் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதுவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, கருணாநிதியைப் பார்க்க நேரில் வருவதை தோழர்கள் முழுமையாகவும், கண்டிப்பாகவும் தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆ.ராசா உள்பட பலர் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com