புத்தக வாசிப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது: நடிகர் நாசர்

எத்தனை நவீனங்கள் உருவானாலும் புத்தக வாசிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்.
செங்கல்பட்டில் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர்கள் நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர்.
செங்கல்பட்டில் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர்கள் நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர்.

எத்தனை நவீனங்கள் உருவானாலும் புத்தக வாசிப்பானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், செங்கை பாரதியார் மன்றமும் இணைந்து நடத்தும் 12 நாள் புத்தகக் கண்காட்சி செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புத்தகத் திருவிழாவின் ஆலோசகர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் ஜி.ஜோஸ்வா சாம் டானி வரவேற்றார். செயலாளர் ஆ.வீரன் அறிமுக உரையாற்றினார். செங்கல்பட்டு சார்-ஆட்சியாளர் வீ.ப.ஜெயசீலன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். தலைமை விருந்தினராக நீதியரசர் சந்துரு பங்கேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தனர். பின்னர் நாசர் பேசியதாவது:
நான் செங்கல்பட்டு மண்ணில் பிறந்தவன். பல்வேறு மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றாலும், நான் பிறந்த ஊரான செங்கல்பட்டில் கண்காட்சி நடைபெறுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. 35 அரங்குகளை அமைத்து நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சி அறிவைப் பெருக்க அருமையான வாய்ப்பு. எத்தனை நவீனங்கள் வந்தாலும் புத்தக வாசிப்பானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றார்.
தலைவாசல் விஜய் பேசியதாவது:
எனது பாட்டி வீடு செங்கல்பட்டை அடுத்த கருங்குழி தான். எனவே நானும் செங்கல்பட்டை சேர்ந்தவன் தான். கணினி நடைமுறை என்பது வெறும் குறிப்பு தான்.
ஆனால் புத்தகம் வாசிப்பது, வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. 35 அரங்குகள் உள்ளன. விளையாட்டுப் பிரிவும் வைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்றார்.
இதனைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற கல்பாக்கம் பாவினி, முனைவர் கலோல்ராய், சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ஆர்.சத்தியநாராயணா, வி.ராஜன்பாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்வியாளர் கு.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com