பேரவை நியமன உறுப்பினராக நான்சி ஆன் சிந்தியா நியமனம்

தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழையைச்
பேரவை நியமன உறுப்பினராக நான்சி ஆன் சிந்தியா நியமனம்

தமிழக சட்டப் பேரவையின் நியமன உறுப்பினராக, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர் நான்சி. 1955-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி பிறந்தார். எம்.பி.பி.எஸ். படித்த அவர், மதுரையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், 14-வது சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். புதிய 15-ஆவது சட்டப் பேரவைக்கும் அவரே நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 ஒவ்வொரு சட்டப் பேரவையிலும், ஆங்கிலோ-இந்தியரான ஒருவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்படுவர். இந்த நிலையில், புதிய 15-ஆவது சட்டப் பேரவையின் நியமன உறுப்பினருக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி திங்கள்கிழமை வெளியிட்டார்.
 ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்படுவதாக அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 அனைத்திந்திய ஆங்கிலோ-இந்தியன் கூட்டமைப்பின் மதுரை கிளை தலைவராக சிந்தியா பிரான்சிஸ் செயல்பட்டு வருகிறார். மதுரையில் உள்ள ஞானஒளிபுரத்தில் வசித்து வருகிறார்.
 கடந்த 1976-ஆம் ஆண்டில் மக்களவை, சட்டப் பேரவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. அப்போது, ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தில் இருந்து ஒருவரை நியமன உறுப்பினராகச் சேர்க்க ஆளுநரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவே இப்போது வரை செயல்பாட்டில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com