உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தடை கோரவில்லை

உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தடை உத்தரவு கேட்டு, நீதிமன்றத்தை நாடவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தடை கோரவில்லை

உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தடை உத்தரவு கேட்டு, நீதிமன்றத்தை நாடவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று திமுக தடை உத்தரவு கேட்டது போலவும், அதை உச்ச நீதிமன்றம் மறுத்து தள்ளுபடி செய்தது போலவும், சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது தவறு. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி, வெளி மாநில அதிகாரிகளைக் கொண்டு தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதுதான் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் சாராம்சம். அதுகுறித்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் குறித்து, வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, தலைமையுடன் கலந்து பேசி, எந்தவிதமான வியூகம் அமைத்து, எப்படி பிரசாரம் மேற்கொள்வது என்பதையெல்லாம் விரைவில் அறிவிப்போம் என்றார் அவர்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளதாகச் செய்திகள் வருகிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு, இதுபற்றி நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, மாவட்ட அளவில் ஏற்கெனவே இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகள் அல்லது கூட்டணியை விரும்பக்கூடிய சில கட்சிகள், திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி, அவரவர்களுடைய ஒத்துழைப்புடன் தேர்தலில் பங்கேற்று வருகின்றனர் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com