உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஊரகம்-நகர்ப்புறப் பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த நிலையில், மக்கள் வாக்களித்து தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களே உள்ளன. ஆனால், சில இடங்களில் ஏலம் விட்டு நிரப்பிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
சட்டத்துக்குப் புறம்பான, ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com