தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு: 9 புதிய ரயில்கள் அறிமுகம்

நிகழாண்டுக்கான (2016-17) தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 9 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி (நடுவில்). உடன், கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன்.
நிகழ்ச்சியில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட்ட தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி (நடுவில்). உடன், கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன்.

நிகழாண்டுக்கான (2016-17) தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 9 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் வரும் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், காக்கிநாடா ரயில்வே ஆகியவற்றின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடும் 13 -ஆவது மண்டல கால அட்டவணையாகும்.
கால அட்டவணையை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் ஆகியோர் வெளியிட்டனர்.
9 புதிய ரயில்கள்: சென்னையில் இருந்து ஆமதாபாத் வரை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட 9 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹம்சஃபர் விரைவு ரயில் (3 -ஆம் வகுப்பு குளிர்சாதன வசதி): ரயில் எண் - 19423 19424 சென்னை - ஆமதாபாத் - சென்னை வாராந்திர ரயில்.
ரயில் எண் - 14716 14715 திருச்சி - ஸ்ரீகங்காநகர் - திருச்சி - ஸ்ரீகங்காநகர் வாராந்திர ரயில்.
ரயில் எண் - 22833 - 22834 புவனேசுவரம் - கிருஷ்ணராஜபுரம் - புவனேசுவரம் வாராந்திர அதிவிரைவு ரயில்.
ரயில் எண் - 22887 - 22888 ஹெளரா - யஷ்வந்த்பூர் - ஹெளரா வாராந்திர அதிவிரைவு பயில்
ரயில் எண் - 12504 - 12503 கமாக்யா - பெங்களூர் கண்டோன்ட்மென்ட் - கமாக்யா வாராந்திர அதிவிரைவு ரயில்.
அந்த்யோதயா விரைவு ரயில் (2-ஆம் வகுப்பு மட்டும்): ரயில் எண் - 22842 22841 சென்னை - சாந்தராகசி - சென்னை வாராந்திர அதிவிரைவு ரயில்.
ரயில் எண் 22878 - 22877 எர்ணாகுளம் - ஹெளரா - எர்ணாகுளம் வாராந்திர அதிவிரைவு ரயில்.
உதய் எக்ஸ்பிரஸ் (குளிர்சாதனை டபுள் டக்கர் ரயில்): ரயில் எண் - 22666 - 22665 கோவை - கேஎஸ்ஆர் பெங்களூரு - கோவை அதிவிரைவு ரயில். இந்த ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும்.
அதிவிரைவு ரயில்: ரயில் எண் - 22838 - 22837 எர்ணாகுளம் - ஹட்டியா - எர்ணாகுளம் வாராந்திர அதிவிரைவு ரயில். இந்தப் புதிய ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பயணிகள் பயன்பாட்டுக்கு மாற்றம்: பராமரிப்புப் பணிகளுக்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் நிறுத்தப்பட்டு வந்த ரயில்கள், அந்த வழித்தடங்களில் இருந்து பயணிகள் ஏறிச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரயில் எண் - ரயிலின் பெயர் - நிறுத்தப்படும் இடங்கள்
22207 - சென்னை - திருவனந்தபுரம் குளிர்சாதன அதிவிரைவு (வாரம் இரு முறை இயக்கப்படும்) ரயில் - காட்பாடி, ஈரோடு
22208 - திருவனந்தபுரம் - சென்னை குளிர்சாதன அதிவிரைவு (வாரம் இரு முறை இயக்கப்படும்) ரயில் - காட்பாடி, ஈரோடு
12889 12890 - டாடா நகர் - யஷ்வந்த்பூர் - டாடா நகர் (வாராந்திர ரயில்) - ஜோலார்பேட்டை
22619 22620 - பிலாஸ்பூர் - திருநெல்வேலி - பிலாஸ்பூர் (வாராந்திர ரயில்)- ஜோலார்பேட்டை
22403 22404 - புதுச்சேரி - புதுதில்லி - புதுச்சேரி அதிவிரைவு (வாராந்திர) ரயில் - விழுப்புரம்.
2 ரயில்கள் நீட்டிப்பு:
சென்னை எழும்பூர் வரையான இரு ரயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்தடையும் சிர்கார் விரைவு ரயில் (ரயில் எண் 17643 17644 ) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்தடையும் விரைவு ரயில் (ரயில் எண் 17652 17651) செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினசரி இயக்கப்படும் இந்த இரு ரயில்களும் சென்னை மாம்பலம், தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
தமிழில் அட்டவணை இல்லை:
தெற்கு ரயில்வேயின் கால அட்டவணையை தமிழில் வெளியிடுவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளிக்கவில்லை. எனவே தமிழில் அட்டவணை வெளியிடப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரத்தில் முனையம்:
சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில் முனையத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது மின் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் 2 மாதத்தில் நிறைவடையும்.
மேலும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2017 -ஆம் தேதி மார்ச் மாதம் நிறைவடையும். அந்தப் பணிகள் நிறைவடைந்த பின்பு, சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். அதன் காரணமாக ரயில்களின் நேரத்தில் மாற்றம் ஏற்படும். இருப்பினும் இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு (2017-2018) கால அட்டவணையின்போதே அமலுக்கு வரும் என்று தெரிவித்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
தாய்மார்களுக்கான உதவி மையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாய்மார்களுக்கான பிரத்யேக உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) முதல் செயல்படவுள்ளது.
இந்த மையத்தில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கான பிரத்யேக வசதி, அவர்களுக்கு ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், தாய்மார்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க, ரயில்வே பாதுகாப்பு படையின் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com